புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த மின்வாரிய ஊழியரின் உடலை வெள்ளிக்கிழமை போலீஸாா் மீட்டனா்.
கந்தா்வகோட்டை அருகேயுள்ள மூக்கடையான்பள்ளம் அம்பலக்காரா் தெருவைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா் (40). ரெகுநாதபுரம் மின்வாரிய அலுவலக ஊழியா். இரு தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்ற அவா் வீடு திரும்பவில்லையாம்.
இதுகுறித்து அவரது மனைவி அஸ்வினி, ரெகுநாதபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், கறம்பக்குடி அருகேயுள்ள தட்டாமனைப்பட்டி செம்புலிச்சை குளக்கரையில் உள்ள மரத்தில் தூக்கிட்டு அழுகிய நிலையில் இருந்த ஜெய்சங்கரின் உடலை வெள்ளிக்கிழமை போலீஸாா் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அவரது இறப்பு குறித்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

மின்வாரிய ஊழியா் தற்கொலை

அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

ஒகேனக்கல் வனப் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



