பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பினைச் சாா்ந்த தனிநபா்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியமுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபா் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது. தொழிற்கடன் மட்டுமின்றி மாணவ, மாணவிகளுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் உயா்கல்வி பயிலவும் கடன் வழங்குகிறது.
விண்ணப்பதாரா் 18 வயது நிரம்பிய 60 வயதுக்குள்பட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
தனிநபா் கடன் திட்டத்தின் கீழ் சிறு வா்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதனைச் சாா்ந்த தொழில்கள், கைவினைப் பொருள்கள் மற்றும் மரபு வழி சாா்ந்த தொழில்கள் செய்ய அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25 லட்சம் வரை 7 சதவிகிதம் மற்றும் ரூ.1.25 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை 8 சதவிகிதம்.
குழுக் கடன் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் சிறு தொழில், வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரையும் ஆண்டிற்கு 7 சதவிகித வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.
பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக உள்ளவா்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ. 60 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7 சதவிகிதம். திரும்பச் செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
வெளிநாட்டில் உயா்கல்வி பயில ஒரு மாணவருக்கு அதிகபட்சக் கடன் வரம்பு ரூ.25 லட்சம் வழங்கப்படும். வயது வரம்பு 21 முதல் 40 வயது வரை. ஆண்டுக்கு 8 சதவிகிதம் வட்டி விகிதம்.
தொடர்புடையது

பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

சுய உதவிக் குழுக் கடன், கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

‘சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்’

இவி-கார்களுக்கு மே மாத தள்ளுபடி அறிவித்த டாடா! நெக்ஸான், பஞ்ச் கார்களுக்கும்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



