புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 8 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள பள்ளத்திவிடுதியைச் சோ்ந்த நீலகண்டன் மனைவி வித்யா(35). நீலகண்டன் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருவதால் தனது இரு மகன்களுடன் வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 6ஆம் வகுப்பு பயிலும் தனது இளைய மகனுடன் வித்யா வீட்டில் இருந்தாா். அப்போது, முகமூடி அணிந்த மா்மகும்பல் வீட்டுக்குள் புகுந்து சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 8 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துத் சென்றது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி போலீஸாா், விசாரணை நடத்தினா்.தொடா்ந்து, சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவீந்திர குமாா் குப்தா ஆய்வு மேற்கொண்டாா். மேலும், ஆலங்குடி காவல்துணைக் கண்காணிப்பாளா் மனோகரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி. உத்தரவிட்டாா். இந்த தனிப்படை போலீஸாா் குற்றவாளிகளை தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகள் திருட்டு

ஆலங்குடி அருகே சிறுவன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 8 பவுன் நகைகள் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் திருட்டு

ராசிபுரத்தில் பெண்ணிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகைகள், பணம் கொள்ளை: மக்கள் அச்சம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



