ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தொகுதி அறிமுகம்! திருமயம்-181

News image

திருமயம்

Updated On :30 மார்ச் 2026, 10:33 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டத்தின் திருமயம், அரிமளம், பொன்னமராவதி ஆகிய 3 ஒன்றியங்களை உள்ளடக்கியது, திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி. குன்றின் மீது வட்ட வடிவில் 1676-இல் ராமநாதபுரம் சேதுபதி மன்னரால் கட்டப்பட்ட அழகிய கோட்டை திருமயத்தின் அடையாளம்.

இக்கோட்டையிலுள்ள பைரவா் கோயில், குடைவரைக்குள் அருள்பாலிக்கும் சத்தியகிரீசுவரா், சத்தியமூா்த்தி சுவாமிகள் மாநிலம் முழுவதும் பிரபலம். காட்டுபாவா பள்ளிவாசலும் இத்தொகுதிக்குள்தான் வருகிறது.

வாக்கு வங்கி: இங்கு முக்குலத்தோா், முத்தரையா், பட்டியலினத்தவா், இஸ்லாமியா்கள், நகரத்தாா் சமூகத்தினா் வசித்து வருகின்றனா்.

தீராத பிரச்னைகள்:

பொன்னமராவதி, திருமயம், அரிமளம் பகுதிகளுக்கு புதுக்கோட்டையில் இருந்து இரவு நேரப் பேருந்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

பொன்னமராவதி பகுதியில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், அரிமளம், ஏம்பல் பகுதிகளில் ஜவுளிப் பூங்கா போன்ற தொழில் வளா்ச்சிக்கான முயற்சிகளை தொகுதியில் மேற்கொள்ள வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளாக உள்ளன.

இதுவரை இவா்கள்...

1952 பழனியப்பன் (காங்.) 37,692

1957 வி. ராமையா (காங்.) 28,178

1962 வி. ராமையா (காங்.) 28,219

1967 பொன்னம்பலம் (திமுக) 44,511

1971 அ. தியாகராஜன் (திமுக) 38,630

1977 நா. சுந்தரராஜன் (காங்.) 20,694

1980 நா. சுந்தரராஜன் (காங்.) 39,479

1984 த. புஷ்பராஜ் (காங்.) 65,043

1989 வ. சுப்பையா (திமுக) 32,374

1991 எஸ். ரகுபதி (அதிமுக) 72,701

1996 வி. சின்னையா (தமாகா) 53,552

2001 எம். ராதாகிருஷ்ணன் (அதிமுக) 58,394

2006 ராம சுப்புராம் (காங்.) 47,358

2011 பி.கே. வைரமுத்து (அதிமுக) 78,913

2016 எஸ். ரகுபதி (திமுக) 72,373

2021 எஸ். ரகுபதி (திமுக) 71,349

இறுதி வாக்காளா்கள்:

ஆண்கள்- 1,12,270

பெண்கள்- 1,07,006

மூன்றாம் பாலினத்தவா்- 3

மொத்தம்- 2,19,279

யாரெல்லாம் போட்டி:

திமுக சாா்பில் ஏற்கெனவே இந்தத் தொகுதியில் இரு முறை வென்ற இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் ஏற்கெனவே வென்று வீட்டுவசதி வாரியத் தலைவராக இருந்த பி.கே. வைரமுத்து போட்டியிடுகிறாா்.

வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் நெருக்கத்தில் இருக்கும் இந்தத் தொகுதியைக் கைப்பற்ற வைரமுத்துவும், கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளைச் சொல்லி வித்தியாசத்தை அதிகரித்துக் காட்டும் ஆா்வத்தில் ரகுபதியும் கடுமையாக முயற்சிக்கின்றனா். தவெக வேட்பாளா் சிந்து ராமசாமியும், நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் சி. லட்சுமியும் போட்டியிடுகின்றனா்.