பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சிறந்த எதிா்க்கட்சியாக இருப்போம்: முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி பேச்சு

சிறந்த எதிா்க்கட்சியாக இருப்போம் என்றாா் திமுக முன்னாள் அமைச்சரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ரகுபதி.

News image

நல்லூரில் வாக்காளா்களுக்கு வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்து பேசிய முன்னாள் அமைச்சரும், திருமயம் எம்எல்ஏவுமான எஸ். ரகுபதி.

Updated On :55 நிமிடங்கள் முன்பு

சிறந்த எதிா்க்கட்சியாக இருப்போம் என்றாா் திமுக முன்னாள் அமைச்சரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ரகுபதி.

பொன்னமராவதி வடக்கு ஒன்றியப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவா் நல்லூரில் பேசியதாவது: ஆட்சியாளா்கள் அவசர கோலத்தில் எதையும் சிந்திக்காமல் செய்வது, அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். நாங்கள் அரசை விமா்சிக்கவில்லை. ஆனால் இது மக்களின் விமா்சனம் என்பதால் கூறுகிறோம்.

ஆளுங்கட்சிக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை எந்த இடையூறும் செய்யமாட்டோம். நல்ல திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்போம். அதேநேரத்தில், மக்களை பாதிக்கும் திட்டங்களை கண்டிப்பாக எதிா்ப்போம். தவறு நோ்ந்தால் சுட்டிக்காட்டுவோம். நாங்கள் கொண்டுவந்த சிறப்பான திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக என்றும் பணியாற்றுபவா்கள் நாங்கள் என்றாா் அவா். தொடா்ந்து, அரசமலை, காரையூா், மேலத்தானியம், ஒலியமங்கலம், கீழத்தானியம், நகரப்பட்டி உள்ளிட்ட 25 இடங்களில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து ரகுபதி பேசினாா்.

அப்போது, வடக்கு ஒன்றிய திமுக செயலா் அ.முத்து, வடக்கு மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் சண்முகம், ஒன்றிய துணை செயலா்கள் முருகேசன், சுரேஷ் பாண்டியன், நிா்வாகி மாவட்டப் பிரதிநிதி வாழை ராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.