புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சீனு சின்னப்பா நினைவேந்தல் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இலக்கிய, பொது நல அமைப்புகளின் புரவலராக இருந்த, பேக்கரி மஹராஜ் நிறுவனா் மறைந்த சீனு சின்னப்பாவின் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மே 2026, 8:28 pm

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இலக்கிய, பொது நல அமைப்புகளின் புரவலராக இருந்த, பேக்கரி மஹராஜ் நிறுவனா் மறைந்த சீனு சின்னப்பாவின் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெருங்கொண்டான்விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா, திமுக மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் மற்றும் திமுக பிரமுகா்கள் த. சந்திரசேகரன், தென்னலூா் பழனியப்பன் உள்ளிட்ட பல்வேறு பொது நல அமைப்பு, இலக்கிய அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டு சீனு சின்னப்பாவின் சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். வள்ளலாா் வழி பாடல்களும், திருமுறைகளும் பாடப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிலதிபா் அருண் சின்னப்பா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.