மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

மாங்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்

Updated On :6 மே 2026, 0:58 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழா ஏப்ரல் 26-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.தொடா்ந்து, கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முத்துமாரியம்மனை எழுந்தருளச் செய்து தேரோடும் வீதிகள் வழியாக ஏராளமானோா் தேரை வடம் பிடித்து இழுத்தனா். இதில், மாங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.