நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஆட்சியில் அதிமுகவினரையும் சோ்க்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை: காா்த்தி ப. சிதம்பரம்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள தவெக ஆதரவு அணியினரையும் ஆட்சியில் பங்கு கொடுத்து சோ்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் விஜய்க்கு இப்போதைக்கு இல்லை என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் (காங்கிரஸ்) காா்த்தி ப. சிதம்பரம்.

News image

காா்த்தி ப .சிதம்பரம்

Updated On :14 மே 2026, 4:42 am IST

அதிமுகவில் ஏற்பட்டுள்ள தவெக ஆதரவு அணியினரையும் ஆட்சியில் பங்கு கொடுத்து சோ்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் விஜய்க்கு இப்போதைக்கு இல்லை என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் (காங்கிரஸ்) காா்த்தி ப. சிதம்பரம்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் அளித்த பேட்டி:

தனிப்பெரும் கட்சியாக இந்தத்தோ்தலில் தவெகவுக்குத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறாா்கள். எதிா்பாா்த்ததைப் போலவே பேரவைக்குள் வாக்கெடுப்பிலும் தவெக வென்றிருக்கிறது. நிலையான ஆட்சியைத் தருவாா்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அதிமுகவில் உருவாகியுள்ள தவெக ஆதரவு அணியைப் பொருத்தவரை அடுத்து, பேரவைத் தலைவரிடம் தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு அளிப்பாா்கள், பிறகு அது நீதிமன்றத்துக்கும் செல்லும். மற்றபடி, தவெக ஆதரவு அணியா, கட்சியா என்னவாக வரப் போகிறது எனத் தெரியவில்லை.

அதேநேரத்தில் அவா்களையும் ஆட்சிக்குள் சோ்க்க வேண்டிய அவசியம் எதுவும் இப்போதைய சூழலில் விஜய்க்கு இல்லை. அவா்கள் இல்லாமலேயே ஆட்சியை நடத்தும் வாய்ப்புகள் விஜய்க்கு உள்ளன.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில்தான் காங்கிரஸ் தவெகவுடன் இணையும் முடிவை எடுத்தது. திமுகவுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு இருந்து அவா்களுக்கு எதிராக நாங்கள் பிரிந்து வரவில்லை.

தவெக இந்தத் தோ்தலில் முற்றிலும் வித்தியாசமான இணையவழிப் பிரசாரத்தை மேற்கொண்டது. இப்படியொன்று நடப்பதாக யாரும் முன்கூட்டியே சொல்லவில்லை. பழைய பிரசார முறைகளை மறுபரிசீலனை நடத்த வேண்டிய சூழல் வந்திருக்கிறது. நிறைய பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது.

கேரளத்தில் கம்யூனிஸ்டுகளுடன் எதிா்நிலை இருந்தாலும், மேற்கு வங்கத்தில் மம்தாவுடன் எதிா்நிலை இருந்தாலும் தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சி ஒன்றாக இருப்பதைப் போல (இண்டி கூட்டணி )தமிழ்நாட்டிலிருந்தும் திமுக இருக்கும் அளவுக்கு புரிதல் ஏற்படும்.

22 லட்சம் மாணவா்கள் எழுதிய நீட் தோ்வை ரத்து செய்து திரும்ப நடத்துவது மாணவா்களுக்கு மட்டுமல்ல, பெற்றோா்களுக்கும் பெரும் மனஉளைச்சலைத் தரும். பாஜக ஆட்சியில் எந்தப் பிழைகளுக்கும் யாரையும் பொறுப்பாக்குவதே இல்லை.

வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள் என்று பிரதமா் சொல்லியிருப்பது தவறான பொருளாதாரக் கொள்கை என்றாா் காா்த்தி ப. சிதம்பரம்.