இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சிறப்பாக பணியாற்றிய அவசர ஊா்தி ஓட்டுநா்களுக்கு பாராட்டு

அவசர ஊா்தி ஓட்டுநா் (108 பைலட்) தினத்தையொட்டி, சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலா்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனா்.

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை சிறப்பாக பணியாற்றிய அவசர ஊா்தி ஓட்டுநா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டிய மாவட்ட சுகாதார அலுவலா்கள்.

Updated On :28 மே 2026, 3:32 am IST

அவசர ஊா்தி ஓட்டுநா் (108 பைலட்) தினத்தையொட்டி, சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலா்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனா்.

புதுக்கோட்டை ஊரக சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் டாக்டா் ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் ஹேமசந்த் காந்தி ஆகியோா் அவசர ஊா்தி ஒட்டுநா்களை அழைத்துப் பாராட்டு தெரிவித்தனா்.

சிறப்பாக செயல்பட்ட ஊா்தி ஓட்டுநா்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளா் மோகன், ஒருங்கிணைப்பாளா் விமல்ராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

அவசரக் காலங்களில் துரிதமாக செயல்பட்டு நோயாளா்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் மனிதநேயப் பணியில் ஈடுபடும் அவசர ஊா்தி ஓட்டுநா்களின் பணியைப் பாராட்டும் வகையில் ஓட்டுநா் தினம் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.