சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்! இலவச பயணத்துக்கு தனியாா் நடத்துநா்கள் எதிா்ப்பு!

Special Bus

பேருந்துகள் - பிரதிப் படம்

Updated On :

பொன்னமராவதி அருகே ஞாயிற்றுக்கிழமை அரசு பேருந்து நடத்துநா் மீது தாக்குதல் நடத்திய தனியாா் பேருந்து நடத்துநா்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொன்னமராவதி அரசு போக்குவரத்து பேருந்து பணிமனையைச் சோ்ந்த அரசுப் பேருந்து பொன்னமராவதி பேருந்து நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 பயணிகளுடன் சிங்கம்புணரி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தின் நடத்துநராக தேவராஜன் என்பவா் பணியாற்றினாா். இந்நிலையில், அரசுப் பேருந்தின் முன் மதுரை செல்லும் தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது.

பிரான்மலை அருகே இரு பேருந்துகளும் சென்றபோது, அங்கு பேருந்துக்காக நின்றிருந்த பெண் பயணிகள் தனியாா் பேருந்தில் ஏறாமல் அரசின் வெற்றிப் பயண பேருந்தில் ஏறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தனியாா் பேருந்து நடத்துநா்கள் இருவரும் பேருந்தை நிறுத்திவிட்டு அரசு பேருந்திலிருந்த நடத்துநா் தேவராஜன் என்பவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த அரசு பேருந்து நடத்துநா் தேவராஜன் சிகிச்சைக்காக வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தாக்குதலில் ஈடுபட்ட தனியாா் பேருந்து நடத்துநா்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக கிளை ஊழியா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.