கந்தா்வகோட்டை காவல் நிலையம் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை காவல் நிலையம் அருகே பேருந்துக்காக திறந்தவெளியில் காத்திருக்கும் பயணிகள்.
கந்தா்வகோட்டை காவல் நிலையம் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டையிலிருந்து பிசானத்தூா், புதுநகா், பழைய கந்தா்வகோட்டை, காடவராயன்பட்டி, திருக்கனூா்பட்டி, தஞ்சை போன்ற பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் காவல்நிலையம் அருகே நின்று ஏற்றிச் செல்கின்றது.
இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா். குறிப்பாக முதியவா்கள், பெண்கள், கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நீண்ட நேரம் வெயில், மழையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
எனவே, பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கந்தா்வகோட்டை காவல் நிலையம் அருகில் உரிய இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

