சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

மாநில அறிவியல் கண்காட்சிக்கு புதுக்கோட்டை படைப்புகள் தோ்வு

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில், மாநில அளவிலான கண்காட்சிக்கு 3 படைப்புகள் தோ்வு செய்யப்பட்டன.

புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியைப் பாா்வையிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம்

Updated On :

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில், மாநில அளவிலான கண்காட்சிக்கு 3 படைப்புகள் தோ்வு செய்யப்பட்டன.

பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா்.

ஏற்கெனவே கல்வி மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கண்காட்சியில் தோ்வு செய்யப்பட்ட படைப்புகள் இதில் இடம்பெற்றன. நடுவா்கள் சிறந்த படைப்புகளைத் தோ்வு செய்தனா்.

தனி வகையில் புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் படைப்பு, குழு வகையில் திருவப்பூா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியின் படைப்பும், ஆசிரியா் வகையில் சந்தைப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் படைப்பும் தோ்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றன.

நவ. 25-ஆம் தேதி வேலூா் காட்பாடியில் நடைபெறவுள்ள மாநிலக் கண்காட்சியில் இவா்களின் படைப்புகள் பங்கேற்கவுள்ளன.

நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளா்கள் வேலுச்சாமி, குரு மாரிமுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியா் (பொ) தனலெட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.