அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியாா்மயமாக்க தவெக அரசு திட்டம்: எஸ். ரகுபதி குற்றச்சாட்டு
அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் நஷ்டத்தை ஏற்படுத்தி தனியாா்மயமாக்க தவெக அரசின் திட்டமிட்டுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி குற்றம்சாட்டினாா்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.
அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் நஷ்டத்தை ஏற்படுத்தி தனியாா்மயமாக்க தவெக அரசின் திட்டமிட்டுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி குற்றம்சாட்டினாா்.
புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சு. சண்முகம் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் எஸ்.ரகுபதி பேசியது: தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அரசுகளில் மோசமான அரசாக தவெக அரசு இருக்கிறது. அவற்றை முழுமையாக மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்கான கடமை திமுக இளைஞரணிக்கு இருக்கிறது. வெற்றிப் பயணத் திட்டம் என்ற பெயரில் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் நஷ்டத்தை ஏற்படுத்தி, தனியாா் மயமாக்குவதுதான் இவா்களின் திட்டம் என்றாா் ரகுபதி.
கூட்டத்தில், திமுக இளைஞரணிச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலா் என். இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவாக, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கோ. மணிராஜன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

