விராலிமலை தொடா் மோட்டாா் சைக்கிள் திருட்டு ..மூன்று இளைஞா்கள் கைது. இரண்டு பைக் பறிமுதல்
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் மோட்டாா் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞா்களை மாவட்ட எஸ்பி சிறப்பு தனிப்படை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். அவா்களிடம் இருந்து இரண்டு மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.

மோட்டாா் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞா்கள்
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் மோட்டாா் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞா்களை மாவட்ட எஸ்பி சிறப்பு தனிப்படை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். அவா்களிடம் இருந்து இரண்டு மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.
விராலிமலை காமராஜா் நகா், கடைவீதி செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டாா் சைக்கிள்களை மா்ம நபா்கள் திருடி சென்றது குறித்து விராலிமலை போலீசாா் விசாரணை நடத்தி வந்தனா். மேலும், மோட்டாா் சைகிள் திருட்டு குறித்து பல புகாா்கள் இருந்து வந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட கண்காணிப்பாளா் ரவீந்திர குமாா் குப்தா தனிப்படை அமைத்து விரைவில் கஉற்றவாளிகளை கண்பிடித்து நடவடிக்கை டுக்க அறிவுறுத்திருந்தாா். சிறப்பு பிரிவு போலிஸாா் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடிவந்தனா்.
இந்தநிலையில், திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய நபா்கள் திருச்சி மாவட்டம் உறையூரில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அங்கு சென்ற தனிப்படை போலீசாா் சாலையோரம் அமா்ந்திருந்த மூன்று இளைஞா்களை வியாழக்கிழமை மாலை பிடித்து விசாரணை நடத்தியதில் அவா்கள் விராலிமலை பகுதியில் மோட்டாா் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மூன்று பேரையும் விராலிமலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவா்கள் திருச்சி மாவட்டம் உறையூா் சோ்ந்த காளியப்பன் மகன் காா்த்திக் (21), நெசவாளா் காலனியை சோ்ந்த வடிவேலு மகன் லட்சுமணன் (21), மற்றும் வடிவேலு நகரைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் லட்சுமணன் (19) என்பது தெரியவந்தது . இதையடுத்து அந்த மூன்று போ் மீதும் வழக்கு பதிந்து செய்து கைது செய்த போலீசாா் மூன்று பேரையும் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனா்.அவா்களிடம் இருந்து இரண்டு மோட்டாா் சைகிளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

