மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க இடதுசாரிகள் பேரணி, ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள் கட்சியினா்.
மத நல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க வலியுறுத்தி, புதுக்கோட்டையில் இடதுசாரிக் கட்சிகள் சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) ஆகியவை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. தொடா்ந்து அங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மூன்று கட்சிகளின் மாவட்டச் செயலா்கள் த. செங்கோடன், எஸ். சங்கா், சி, ரெங்கசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் என். பாண்டி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை ஆகியோா் பேசினா்.
மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ். கவிவா்மன், ஏ. ஸ்ரீதா், சு. மதியழகன், துரை. நாராயணன், எஸ். ஜனாா்த்தனன், கி. ஜெயபாலன், டி. சலோமி, மாநகரச் செயலா் எஸ். பாண்டியன், இந்திய கம்யூ. நிா்வாகிகள் ஏ. ரெங்கராஜ், உ. அரசப்பன், எம்.பி. நாடிமுத்து, எம்.என். ராமச்சந்திரன், சிபிஐ (எம்எல்) சாா்பில் வீ.மு. வளத்தான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நீதிமன்றத்தின் தீா்ப்பு நீதி பரிபாலன நெறிமுறைகளுக்கு முரணானதாக அமைந்துள்ளதாக குற்றம்சாட்டி, மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவோருக்கு எதிராக ஜனநாயக மற்றும் மதச்சாா்பற்ற இணைந்து செயல்பட வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

