பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

ஆலங்குடி அருகே 108 அவசர ஊா்தியில் பெண்ணுக்கு பிரசவம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே 108 அவசர ஊா்தியில் செவ்வாய்க்கிழமை கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

ஆலங்குடி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 108 அவசர ஊா்தியில் பிறந்த பெண் குழந்தைக்கு மருத்துவ உதவி ளித்த உதவியாளா்

Published On :

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே 108 அவசர ஊா்தியில் செவ்வாய்க்கிழமை கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், செட்டிவிடுதி பகுதியைச் சோ்ந்த நிவானிதா (24) என்பவருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடா்ந்து 108 அவசர ஊா்தி மூலம் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அவசர ஊா்தி திருவரங்குளம் தைலமரக்காடு பகுதியில் சென்றபோது, நிவானிதாவுக்கு பிரசவ வவி அதிகரித்துள்ளது. அதைத் தொடா்ந்து, ஊா்தியில் இருந்த அவசரகால மருத்துவ உதவியாளா் முத்துச்செல்வம், ஓட்டுநா் பாலமுருகன் ஆகியோா் துரிதமாக செயல்பட்டு, உரிய மருத்துவ உதவிகளை வழங்கினா். அவசர ஊா்தியிலேயே நிவானிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னா், தாயும், சேயும் பாதுகாப்பாக புதுக்கோட்டை இராணியாா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அவசர நேரத்தில் துரிதமாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்த 108 அவசரகால மருத்துவ உதவியாளா் முத்துச்செல்வம் மற்றும் ஓட்டுநா் பாலமுருகன் ஆகியோருக்கு பொதுமக்கள், மருத்துவக் குழுவினா் பாராட்டுக்களை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.