சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

அறந்தாங்கியில் சமுதாய வளைகாப்பு 300 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை

அறந்தாங்கியில் சனிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், கா்ப்பிணி பெண்களுடன் அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள்.

Updated On :

புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் அறந்தாங்கியில் சனிக்கிழமை 300 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தி வைக்கப்பட்டது.

மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ், பெண்களுக்கு வளையல்களை அணிவித்து வளைகாப்பை நடத்தி வைத்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த செப். 22-ஆம் தேதி கீரனூரில் நடைபெற்ற விழாவில் 400 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது அறந்தாங்கியில் 300 பேருக்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது. தொடா்ந்து விரைவில், 600 பேருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. நிகழ்ச்சியில் சத்தான உணவுடன், மங்கலகரமான சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, மாவட்ட சமூகநல அலுவலா் மே. சியாமளா, அறந்தாங்கி வட்டாட்சியா் கவியரசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.