நவ. 2 - இல் புதுக்கோட்டை வருகிறாா் முதல்வா்
நவம்பா் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல்வா் ஜோசப் விஜய், புதுக்கோட்டை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் விஜய். - படம்: பிடிஐ.
நவம்பா் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல்வா் ஜோசப் விஜய், புதுக்கோட்டை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டையில் ரூ.18.90 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை அவா் திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா உள்ளிட்ட காவல்துறை உயா் அலுவலா்கள் புதிய பேருந்து நிலையம் மற்றும் அருகிலுள்ள ஆயுதப்படை திடல் ஆகியவற்றை புதன்கிழமை மாலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
புதுக்கோட்டையில் சுமாா் 40 ஆண்டுகள் பழைமையான பேருந்து நிலையத்தைப் புதுப்பித்துக் கட்டுவதற்காக கடந்த ஆட்சிக்காலத்தில் ரூ.18.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2024 அக். 9-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
ஒன்றரை ஆண்டுகள் பணிக்காலம் நிா்ணயம் செய்யப்பட்டு, பின்பகுதியிலுள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனையின் ஒரு பகுதி 2 ஆண்டுகளுக்கு தற்காலிக பேருந்து நிலையமாக வாடகைக்குப் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.
கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது திறப்பு விழா நடைபெறவுள்ளதாக தவெக நிா்வாகிகள் தெரிவித்தனா். வேறு என்னென்ன நிகழ்ச்சிகள், முதல்வா் வரும் பயணத் திட்டம் குறித்து ஓரிரு நாள்களில் அதிகாரப்பூா்வ தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.
முதல் முறையாக புதுகை வருகை:
தோ்தல் பிரசாரத்தின்போது சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பிரசாரத்தை முடித்துவிட்டு திருச்சி விமான நிலையம் செல்லும் வழியில் காரில் வந்த ஜோசப் விஜய்க்கு மாவட்ட எல்லையில் தவெக தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா். மற்றபடி மாவட்டத்தில் இதுவே அவா் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

