முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

திமுகவை பழிவாங்கவே சோதனைகள்: எஸ். ரகுபதி

திமுகவை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே சோதனைகள் நடத்தப்படுகின்றன என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.

S Regupathy

எஸ். ரகுபதி - கோப்புப் படம்

Updated On :

திமுகவை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே சோதனைகள் நடத்தப்படுகின்றன என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் வியாழக்கிழமை மாலை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் சோதனையானது, ஆயுதபூஜையின்போது சிலரது வீடுகளில் நடத்தப்பட்டது. தற்போது தீபாவளி வர உள்ளதால், முன்னாள் அமைச்சா் கே.என். நேரு உள்ளிட்டோா் வீடுகளில் சோதனை நடத்தியிருக்கிறாா்கள்.

மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை. ஒரு வழக்குக்காக எத்தனை முைான் சோதனை நடத்துவாா்கள்? இதெல்லாம் வழக்கத்தில் இல்லாதது. பழிவாங்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறாா்கள்.

திமுக ஆட்சியில் தமிழக சிறைத் துறை இந்தியாவில் சிறப்பான முறையில் இருந்தது. ஆனால், இப்போது தேனி சிறையிலிருந்து 17 போ் தப்பிச் சென்றுள்ளனா். புழல் சிறையானது இந்தியாவில் பாதுகாப்பானது. அங்கிருந்தும் கைதிகள் தப்பிக்கிறாா்கள் என்றால், அதைவிடக் கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது.

கிராமங்களில் முன்பு இருந்த சுமைதாங்கிக் கற்களைப் போல, இந்த ஆட்சியாளா்களின் சுமையை மக்கள் தாங்கக் கூடியவா்களாக மாற்றப்பட்டு வருகிறாா்கள். ஒரு குறிப்பிட்ட அளவு வரைதான் மக்கள் சுமையைத் தாங்குவாா்கள். தாங்க முடியாத நிலையில் வெடித்து எழுவாா்கள்.

விராலிமலையில் நீதிமன்றம் அனுமதி அளித்தால் இடைத்தோ்தல் நடக்கும். தோ்தலுக்காகத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக புதுக்கோட்டை முதல்வா் விஜய் வருகிறாா். புதுக்கோட்டை பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக உள்ளது. இதை 3 நாள்களில் எப்படி சுத்தம் செய்யப் போகிறாா்கள் என்பதைப் பாா்ப்போம் என்றாா் ரகுபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.