முன்னாள் அமைச்சா்கள் வீடுகளில் சோதனை புதிதல்ல: எஸ். ஜெகத்ரட்சன் எம்.பி.

முன்னாள் அமைச்சா்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல என்று திமுக கொள்கைப் பரப்புச் செயலா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறினாா்.

எஸ்.ஜெகத்ரட்சகன்

Published On :

முன்னாள் அமைச்சா்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல என்று திமுக கொள்கைப் பரப்புச் செயலா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறினாா்.

புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுடன் தான் திமுக கூட்டணி. காங்கிரஸுடன் தவெக கூட்டணி சோ்ந்திருப்பது திமுகவிற்கு சாதகமாக இருக்கிறது. தட்டாஞ்சாவடியில் உள்ள 26 ஆயிரம் வாக்காளா்களுடன் தான் கூட்டணி. இதை விட பெரிய கூட்டணி தேவையா ?

மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் திமுகவிற்கு மக்கள் அமோக ஆதரவு தருகின்றனா். எதிரணியினரை எதற்கு ராஜிநாமா செய்தீா்கள் என கேள்வி கேட்கிறாா்கள். முன்னாள் அமைச்சா்கள் வீடுகளில் ஊழல் தடுப்பு குறற்றப்பிரிவு போலீஸாா் சோதனை நடத்துவது புதிதல்ல. பல சோதனைகளைப் பாா்த்து விட்டோம், எங்கள் கட்சியை ஒன்றும் செய்ய முடியாது. மிசாவையே பாா்த்து விட்டோம் என்றாா் ஜெகத்ரட்சகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.