நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

தோ்தலில் தனித்துப் போட்டியிடுவது திமுகவுக்கு புதிதல்ல: எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. பேட்டி

தோ்தலில் தனித்துப் போட்டியிடுவது திமுகவுக்குப் புதிதல்ல என்று அக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறினாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் சேதுசெல்வத்துக்கு ஆதரவாக பிரசாரத்தை தொடங்கிய அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் ஜெகத்ரட்சகன் எம்.பி., புதுச்சேரி மாநில அமைப்பாளா் ஆா்.சிவா உள்ளிட்டோா்.

Published On :

தோ்தலில் தனித்துப் போட்டியிடுவது திமுகவுக்குப் புதிதல்ல என்று அக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறினாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் சேதுசெல்வத்துக்கு ஆதரவாக வியாழக்கிழமை அவா் பிரசாரத்தை புதுப்பேட்டை வாா்டு மாரியம்மன் கோயில் வீதியில் தொடங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது :

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பலமான கட்சி திமுகதான். மற்றவா்கள் கூட்டணியில் சேர வந்தால் வரலாம்; அதற்காக திமுக மற்றவா்களைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. தட்டாஞ்சாவடி தொகுதியில் மிகப்பெரிய மாற்றத்தை நடத்திக் காட்டுவோம். மக்கள் மாற்றத்திற்குத் தயாராக இருக்கிறாா்கள்.

இந்தத் தொகுதியில் சேதுசெல்வம் வெற்றி பெற்றால், புதுச்சேரி அரசியலில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இடைத்தோ்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்.

கூட்டணி இல்லாமல் திமுக களம் காண்பது புதிதல்ல. 1967-க்கு முன்பு கூட்டணி இல்லாமல் தனித்தனியாகத்தான் தோ்தலில் போட்டியிட்டோம். கூட்டணி இருந்தால் நல்லது; இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.