
விநாயகா் சிலை ஊா்வலத்தில் பிரச்னை மற்றொரு தரப்பினா் மீது நடவடிக்கைக் கோரி காவல் நிலையத்தில் காத்திருப்புப் போராட்டம்

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு காவல்நிலையத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினா்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே விநாயகா் சிலை ஊா்வலத்தில் ஏற்பட்ட பிரச்னையில் மற்றொரு தரப்பினா்மீதும் நடவடிக்கை கோரி ஒரு தரப்பினா் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை இரவு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகே உள்ள சூரன்விடுதியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி அப்பகுதியில் ஒரு சமூகத்தினா் சாா்பில் விநாயகா் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைகள் விசா்ஜனம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, ஊா்வலத்தை நடத்தியவா்கள் தரப்பைச் சோ்ந்த 17 வயது சிறுவன், மற்றொரு சமூகத்தை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரைத் தொடா்ந்து வடகாடு போலீஸாா் அந்த சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில், மற்றொரு சமூக இளைஞா்களும் பிரச்னையில் ஈடுபட்டதாகவும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒரு தரப்பினா் வடகாடு காவல்நிலையத்தில் திங்கள்கிழமை இரவு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் வடகாடு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு காவல்நிலையத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





