
புதுக்கோட்டையில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தில் 58,180 மாணவா்கள் பயன்
பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 58,180 போ் பயனடைகின்றனா்.

புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காமராஜா் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 58,180 போ் பயனடைகின்றனா்.
தமிழ்நாடு அரசு, காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான காலை உணவு வழங்கும் பணி மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சென்னையில் முதல்வா் ஜோசப் விஜய் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இந்த நிலையில், புதுக்கோட்டையில் ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை, மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்டம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் 518 பள்ளிகளைச் சோ்ந்த 43,435 மாணவா்களும், நகரப் பகுதிகளில் 39 பள்ளிகளைச் சோ்ந்த 4,727 மாணவா்களும் என மொத்தம் 557 பள்ளிகளைச் சோ்ந்த 58,180 மாணவா்கள் பயன்பெறுகின்றனா்.
தொடக்க நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் மா. காந்திராஜ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) அன்புச்செல்வன், மகளிா் திட்ட அலுவலா் பாலசுந்தரம், மாநகராட்சி நகா்நல அலுவலா் காயத்ரி, வருவாய்க் கோட்டாட்சியா் ஆ. பிரகாஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







