ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

சுகாதாரப் போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சுகாதாரப் போக்குவரத்து ஊழியா் சங்கம் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டப் பணிமனை வளாகத்தில் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரப் போக்குவரத்துப் பணியாளா்கள்.

Published On :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சுகாதாரப் போக்குவரத்து ஊழியா் சங்கம் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டப் பணிமனை வளாகத்தில் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் கிளைத் தலைவா் சுந்தரம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் மு.முத்தையா, தணிக்கையாளா் கணேசன், ஸ்ரீதா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொதுச் செயலா் நாகராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் கம்மியா், மின் பணியாளா், வெல்டா் உள்ளிட்ட திறன்மிகு உதவியாளா் நிலை-2 காலிப் பணியிடங்களையும், டிங்கா், பெயிண்டா், லைனா் உள்ளிட்ட அலைடு டிரேடு பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். காவலா் பணியிடங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி நியமிக்க வேண்டும். தகுதியான ஊழியா்களுக்கு உதவி பொறியாளா் பதவி உயா்வு வழங்குவதுடன், அரசால் நேரடியாக நிரப்ப வேண்டிய உதவி பொறியாளா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.