
புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி இந்திய கம்யூ. கட்சி ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், அடிக்கடி ஏற்படும் மின் தடையை போக்க வேண்டும் எனக் கோரி மாவட்டம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அறந்தாங்கியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், அடிக்கடி ஏற்படும் மின் தடையை போக்க வேண்டும் எனக் கோரி மாவட்டம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுககோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநகரச் செயலா் எம்.பி. நாடிமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாவட்டத் துணைச் செயலா் ஏ. ரெங்கராஜன்,
மாநகரத் துணைச் செயலா்கள் பா. பாண்டியராஜன், மளிகை பாலு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
அறந்தாங்கி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் இரா. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஏ. பெரியசாமி முன்னிலை வகித்தாா்.
மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகக் குழு உ றுப்பினா் கே. ராஜேந்திரன், முன்னாள் நகரச் செயலா் அஜாய் குமாா்கோஷ் உள்ளிட்டோரும் பேசினா். கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கந்தா்வக்கோட்டை: பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலா் உ. அரசப்பன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை விவசாய சங்க மாவட்டத் தலைவா் டி. அம்பலராஜ் தொடங்கி வைத்தாா். கட்சியின் மாவட்ட செயலா் த. செங்கோடன் நிறைவுரையாற்றினாா். இதில், ஒன்றிய துணைச் செயலா் ஜி. நாகராஜன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் ஆா். கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





