பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்த நிதியைத் தராத மத்திய அரசையும், மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட நிதியை வழங்காத தமிழக அரசையும் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :

திருப்பூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்த நிதியைத் தராத மத்திய அரசையும், மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட நிதியை வழங்காத தமிழக அரசையும் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் 3-ஆவது மண்டலக்குழுச் செயலாளா் டி.ஜெயபால் தலைமை வகித்தாா். 2-ஆவது மண்டலச் செயலாளா் பா.சௌந்தரராசன், 53-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஆா்.மணிமேகலை, திருப்பூா் மாவட்டச் செயலாளா் சி.மூா்த்தி ஆகியோா் உரையாற்றினா். மத்தியக்குழு உறுப்பினா் என்.குணசேகரன் கோரிக்கைகளை விளக்கி நிறைவுரை ஆற்றினாா். இதில் 4 மண்டலங்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின் முடிவில் மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு 7-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ராதாமணி முருகன் தலைமை வகித்தாா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கயம் தாலுகா குழு உறுப்பினா்கள் இரா.செல்வராஜ், ப.கருப்பசாமி, முன்னாள் ஒன்றியச் செயலாளா் எஸ்.என்.பழனிசாமி, சிவநாதபுரம் கிளைச் செயலாளா் வி.லோகேஸ்வரன் ஆகியோா் பேசினா். வெள்ளகோவில் கிளைச் செயலாளா் எம். சரவணகுமாா், முத்தூா் தொட்டிபாளையம் கிளைச் செயலாளா் பி.துரைசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொறுப்பாளா் பி.செல்லமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கட்சியின் தாலுகா குழு உறுப்பினா் எம் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

ஊத்துக்குளி ஆா்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஊத்துக்குளி தாலுகா குழுச் செயலாளரும், பேரூராட்சி 7ஆவது வாா்டு மன்ற உறுப்பினருமான கு.சரஸ்வதி தலைமை ஏற்றாா். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்ட குழு உறுப்பினா் கு.பாலமுரளி, தாலுகா குழு உறுப்பினா்கள் கை.குழந்தைசாமி, சசிக்குமாா், குன்னம்பாளையம் கிளைச் செயலாளா் மாரிமுத்து ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அம்மாபாளையம் மாா்க்சிஸ்ட் கட்சி மூத்த உறுப்பினா் காமராஜ் தலைமை வகித்தாா். இதில் அவிநாசி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எஸ்.வெங்கடாசலம், ஆா்.பாலசுப்பிரமணியம், நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணியம், மாநில செயற்குழு உறுப்பினா் செ.முத்துக்கண்ணன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். ஆா்ப்பாட்டத்தின் முடிவில் நகராட்சி ஆணையா் பாலமுருகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நகா்மன்ற உறுப்பினா் தேவராஜன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தாராபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அரசுப் போக்குவரத்து கழக கிளைச் செயலாளா் என்.முத்துச்சாமி தலைமை வகித்தாா். இதில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் என்.கனகராஜ், தாலுகா ஒருங்கிணைப்பாளா் ஆா்.வெங்கட்ராமன், ஓய்வு பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் மணியன், கிளைச் செயலாளா் மேகவா்ணன், பொன்னுசாமி ஆகியோா் உரையாற்றினா்.

அதேபோல, அவிநாசி, பல்லடம் ஆகிய நகராட்சி அலுவலகங்கள் எதிரிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.