நிதிநிலை அறிக்கையில் கல்வி, நூலகத் துறைக்கு தமிழக முதல்வர் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார் தமிழக வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம்.
தஞ்சாவூர் மாவட்ட நுலகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற உலக புத்தக தின விழாவில் அவர் மேலும் பேசியது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம் கல்வி மற்றும் நூலகத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடுகளைத் தந்து வளர்ச்சிப் பெறச் செய்து வருகிறார்.
ஒரு நாடு வளம் பெற வேண்டுமானால் அங்குள்ள நாட்டு மக்கள் கல்வியோடு இணைந்த அறிவு பெற வேண்டும்.
இதற்கு அடித்தளமாக அமையும் புத்தகங்கள், நூல்கள், நூலகங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இதனடிப்படையில் பல்வேறு புரட்சியாளர்கள், சிந்தனையாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எல்லாம் கிராமப்புற மக்களும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமப்புறங்களிலும், உட்புற நூலகங்களை அமைத்து தேவையான புத்தகங்களை வாங்கிப் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பயன்படுத்தி பொதுமக்கள் குறிப்பாக, மாணவ, மாணவிகள் கல்வியில் எழுச்சிப் பெற வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தலைமை வகித்தார். பின்னர், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர் நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால், மாவட்ட நூலக அலுவலர் இரா. செல்லாள், மாவட்ட நூலகர் மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: 3 அறிமுக வீரர்களுடன் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! ராஜஸ்தான் பாஜக நிர்வாகி கைது!

கடந்த 4 ஆண்டுகளாக இபிஎஸ் செய்த ஒரே வேலை நீக்குவதுதான்: சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!

அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
