ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இல்லம்தோறும் மக்கள் சந்திப்பை தொடங்கியது காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் 133 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தஞ்சாவூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இல்லம்தோறும் மக்கள் சந்திப்பு இயக்கத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:18 pm

DIN

காங்கிரஸ் கட்சியின் 133 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தஞ்சாவூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இல்லம்தோறும் மக்கள் சந்திப்பு இயக்கத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி,  துண்டறிக்கைகளை முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி. வரதராசன், வழக்குரைஞர் பிரிவு நிர்வாகி சி. செங்குட்டுவன், ஜோசப் ராஜ் ஆகியோர் விநியோகம் செய்தனர். துணைத் தலைவர் எஸ்.ஆர். வாசு, பொருளாளர் ஆர். பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல,  மேலவீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற கட்சியின் 133 ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்குத் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோ. அன்பரசன், பொருளாளர் வயலூர் எஸ். ராமநாதன், பொதுக் குழு உறுப்பினர் ஆர். கோவிந்தராஜ், ஐஎன்டியுசி மாநிலப் பொதுச் செயலர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 தஞ்சாவூர் மாவட்ட ராஜீவ்காந்தி நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் நா. பழனிவேல் தலைமை வகித்தார். மாநகரச் செயலர் ஒய். அலாவுதீன், துணைத் தலைவர் டி.பி.எம். ராஜு, ஐஎன்டியுசி மாநிலச் செயலர் ஆர். ஆரோக்கியசாமி, மன்றத் தலைவர் இரா. செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
கும்பகோணத்தில் நடைபெற்ற விழாவுக்கு வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். இதில், ஏழை மக்களுக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.ஆர். லோகநாதன் வேட்டி, சேலைகள் வழங்கினார். துணைத் தலைவர் ஹூமாயூன் கபீர், பொதுச் செயலர் பிரபாகரன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, முன்னாள் நகரத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.