தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பேராவூரணி வட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம்   பேராவூரணி வட்டாட்சியர்  அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்ட உதவி ஆட்சியர் சக்திவேல்  தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:17 pm

DIN

பேராவூரணி வட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம்   பேராவூரணி வட்டாட்சியர்  அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்ட உதவி ஆட்சியர் சக்திவேல்  தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில்,  பேராவூரணி, ராஜா மடம், பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள எரிவாயு முகவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விழிப்புணர்வு அமைப்பு சார்பில் ராமலிங்கம்,  எரிவாயு நுகர்வோர் குறைகளை குறித்து  பேசினார்.  வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச  எரிவாயு இணைப்பு மற்றும் எரிவாயு விபத்து காப்பீடு, எரிவாயு நுகர்வோருக்கு வழங்கும்போது  எரிவாயுவை எடை வைத்து காட்டுதல், மற்றும் நுகர்வோரிடம் எரிவாயு கட்டணம் கூடுதலாக வசூல் செய்தல் போன்ற குறைகள் குறித்து பொதுமக்கள் பேசினர். இதற்கு பதிலளித்து பேசிய மாவட்ட உதவி ஆட்சியர்,  இலவச எரிவாயு இணைப்பை தகுதியுள்ள நபர்களுக்கு கொடுக்க எரிவாயு முகவர்களுக்கு  அறிவுறுத்தினார்.  எரிவாயுவால் ஏற்படும் விபத்துகளுக்கு காப்பீடு கிடைக்கும் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கும்,  முகவர்களுக்கும் உத்தரவிட்டார். முகாமில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு , மாவட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி, பேராவூரணி வட்டாட்சியர் பாஸ்கரன், பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலர் சாந்தகுமார் மற்றும் முகவர்கள் நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.