எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காவிரி-வைகை-குண்டாறு திட்டச் செயலாக்கம் தேவை

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:58 am

DIN

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கறம்பக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 13-வது மாவட்ட மாநாடு 3 நாள் நடைபெறுகிறது.  2-வது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ராமையன் தலைமை வகித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் வறட்சியைக் கருத்தில் கொண்டு விவசாயத்தையும், நீராதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய, மாநில அரசுகள் உறுதியாக அறிவிக்க வேண்டும். மாவட்டத்தில் வேலையில்லாமல் அவதிப்படும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இங்கு கிடைக்கும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி அரசு சார்பில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.  குடியிருக்க வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீடு, இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.  குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 மாநில செயற்குழு உறுப்பினர் எம். குணசேகரன், மாவட்ட  செயற்குழு  உறுப்பினர்  எம். உடையப்பன்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். பொன்னுச்சாமி,   மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன்,  முன்னாள் எம்எல்ஏ  ராஜசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். பொன்னனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.