பேராவூரணி அண்ணாசிலை அருகே திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் நினைவு நாள் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் வை.சிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் அரு.நல்லதம்பி, ஆசிரியர் சி.வேலு, மண்டல இளைஞரணி செயலாளர் சோம.நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திராவிடர் கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் இரா.நீலகண்டன், ஒன்றியச் செயலாளர் சி.சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரத் தலைவர் அரங்கசாமி வரவேற்றார். நகரச்செயலாளர் தமிழ்ச்செல்வம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.