பாபநாசம் பேரூராட்சி சார்பில் வடிகால் தூர்வாரும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் பேரூராட்சிக்குள்பட்ட 15 வார்டுகளிலும் டெங்கு நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பாபநாசம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது. தஞ்சாவூர் கும்பகோணம் பிரதான சாலையிலுள்ள 108 சிவாலயம் பகுதியிலும் அரையபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்அருகிலும் தேங்கியிருந்த மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த பணிகளை செயல் அலுவலர் நா.மனோகரன் துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமரகுரு , எழுத்தர் வைரக்கண்ணு உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.