வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கொள்ளையடிக்க திட்டமிட்ட3 பேர் கைது

பாபநாசம் அருகே பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:07 am

DIN

பாபநாசம் அருகே பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
பாபநாசம் காவல் ஆய்வாளர் (பொ) ரமேஷ், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் செந்தில் மற்றும் போலீஸார்,  புலிமங்கலம் கிராமத்தில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.
அப்போது,  அந்த பகுதியிலுள்ள திரெளபதை அம்மன் கோவில் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் 5 பேர் நின்றுகொண்டிருந்தனர். போலீஸாரை பார்த்ததும் அவர்கள் தப்பியோடினர்.போலீஸார் அவர்களில் 3 பேரை விரட்டி பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் வலங்கைமான் பகுதியை சேர்ந்த நெடுமாறன்(24), அவரது சகோதரர் வினோத்(25), சாக்கோட்டை பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பதும், தப்பியோடியவர்கள்  நெடுமாறனின் சகோதரர் பிரகாஷ், திப்பிராஜபுரத்தை சேர்ந்த செந்தில் என்பதும் தெரிய வந்தது. மேலும், அவர்கள் அந்தப் பகுதியில் கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரிந்தது.இதையடுத்து, பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து, பாபநாசம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். மூவரையும் 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி ராஜசேகர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.