கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மின் கம்பிகள் அறுந்தால் தகவல் அளிக்கலாம்

மழையின்போது மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் மின் வாரிய அலுவலகத்துக்குத் தகவல் அளிக்கலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:13 am

DIN

மழையின்போது மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் மின் வாரிய அலுவலகத்துக்குத் தகவல் அளிக்கலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சாவூர் நகரிய செயற் பொறியாளர் சீ. கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: மின் கம்பத்துக்காக அமைக்கப்பட்டுள்ள தாங்கு கம்பியில் (ஸ்டே வயர்) அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கக் கூடாது. அதில் கால்நடைகளைக் கட்டக் கூடாது.
குளியலறை, கழிப்பறையில் ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக் கூடாது. மின் கம்பங்களை பந்தல் காலாகப் பயன்படுத்தக் கூடாது. மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அதைத் தொட வேண்டாம். பிறரையும் தொட விடாமல் கண்காணித்து, அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்குத் தகவல் அளிக்கலாம்.
உதவி செயற் பொறியாளர்களின் செல்லிடப்பேசி எண்கள்:
நீதிமன்றச் சாலை - 9445853736, மகர்நோம்புச்சாவடி - 9445853735, ஈஸ்வரி நகர் -9445853733, கரந்தை - 9445853734, அரண்மனை - 9445853739, அருளானந்த நகர் - 9445853738, நகரியம், 9445853732, 9445853731, நகரிய துணை மின் நிலையத்தை 04362-231061, கரந்தை துணை மின் நிலையத்தை 04362-251444, மணிமண்டபம் துணை மின்நிலையத்தை - 04362-230335 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.