பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஓய்வூதிய நலச் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் ரயிலடியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொருளாளர் மா. நடனசிகாமணி தலைமை வகித்தார். இதில் மாத ஓய்வூதியம் ரூ.6,500-ஐ பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக 3ஆயிரம் ரூபாயை பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். ஓய்வூதியர் அனைவருக்கும் இஎஸ்ஐ மருத்துவ வசதி செய்துதர வேண்டும். மூலதன திருப்பத்தொகையை ஓய்வூதியர் மறைவுக்குப் பிறகு அவரது வாரிசுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இதில் மாநில துணைத் தலைவர் கே. பாஸ்கரன், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டத் தலைவர்கள் பி. சீனிவாசன், எம். கந்தசாமி, டி. சர்புதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.