ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தஞ்சபுரீசுவரர் கோயிலில் குபேர யாகம்

ஐப்பசி மாத அமாவாசையையொட்டி தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீசுவரர் கோயிலில் குபேர யாகம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:09 am

DIN

ஐப்பசி மாத அமாவாசையையொட்டி தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீசுவரர் கோயிலில் குபேர யாகம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசையன்று யாகம் நடைபெறும். இதில், ஐப்பசி அமாவாசையான தீபாவளியன்று நடைபெறும் குபேர யாகம் பிரசித்தி பெற்றது.  
நிகழாண்டு ஐப்பசி மாத அமாவாசை தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான வியாழக்கிழமை வந்தது.
இதையொட்டி, தஞ்சபுரீசுவரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற யாகத்தில் ஹோம பொருள்கள், பழங்கள் போன்றவை போடப்பட்டன.
முன்னதாக, கோயிலில் உள்ள குபேரனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் போன்ற 11 வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், தஞ்சபுரீசுவரர், ஆனந்தவல்லி அம்மன், குபேர மகாலட்சுமிக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
மேலும், பச்சை நிற 11 அகல் விளக்குகளில் நெய் விளக்கேற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.