தமிழகம் முழுவதும் காவிரி நீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரத யாத்திரை நடத்துவது என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முடிவு செய்துள்ளது.
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் இச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து மத்திய அரசு மீது கண்டனம் தெரிவித்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இச்சங்கம் சார்பில் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் காவிரி நீர் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவிரி ரத யாத்திரை ஏப்ரல் மாத இறுதியில் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத் தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், நிர்வாகிகள் சாமிநாதன், வரதராஜன், ஒருங்கிணைப்பாளர் சம்பந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் பாடல் அப்டேட்!

போதைக் கொடுமையால் நிகழும் கொடூர குற்றங்களை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை தலைமைச்செயலத்தில் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்!

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


