கும்பகோணம் அருகே அங்காடியில் வழங்கப்பட்ட அரிசியில் எடை குறைவாக இருந்ததை அறிந்த ஆட்சியர் கடைக்காரரை எச்சரிக்கை செய்தார்.
கும்பகோணம் அறிஞர் அண்ணா நகரப் பேருந்து நிலையம், வெளியூர் செல்லும் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். அங்கு உள்ள உணவகம் சுகாதாரமற்ற முறையில் இடத்தை ஆக்ரமிப்பு செய்து சுகாதாரமற்ற முறையில் உணவு வழக்கப்பட்டு வருவதைப் பார்வையிட்ட ஆட்சியர் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
கழிவு நீர் வடிகால் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்ட பகுதியைச் சரி செய்ய வேண்டும் என்றும், ஆண்கள் கழிப்பறை, பெண்கள் கழிப்பறையைச் சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும். பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலக்கொருக்கை கிராமக் கூட்டுறவு அங்காடியில் ஆய்வு செய்தபோது, இருவர் தலா 12 கிலோ வீதம் அரிசி வாங்கிக் கொண்டு வெளியில் வந்தனர். அவர்கள் கொண்டு வந்த அரிசியின் அளவை, தராசில் வைத்து எடை சரியாக உள்ளதா என சரி பார்த்தார்.
ஒருவர் வாங்கிய அரிசியில் 12 கிலோவுக்கு பதிலாக 11.50 கிலோவும், மற்றொருவருக்கு 12 கிலோவுக்கு பதிலாக 10.94 கிலோவும் இருந்ததைக் கண்டறிந்து, கடைக்காரரை கடுமையாக எச்சரித்தார். குறைவாக வழங்கப்பட்ட அரிசி மீண்டும் அளவீடு செய்து இருவருக்கும் 12 கிலோ வழங்கப்பட்டது. மேலும் பல இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது, நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி, நெடுஞ்சாலைத் துறைக் கோட்டச் செயற் பொறியாளர் சரவணசெல்வம், கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடாசலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கு. அருணாசலம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிஇசிஐஎல் நிறுனத்தில் பொறியாளர், டெக்னீசியன் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி!
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை குறைந்தது! (ஜூன் 24)
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


