ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சுந்தர மகாகாளியம்மன் கோயிலில் படுகள காட்சி

கும்பகோணம் சுந்தர மகாகாளியம்மன் கோயில் 127வது ஆண்டு பிரமோத்ஸவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை படுகள காட்சி நடைபெற்றது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:32 am

DIN

கும்பகோணம் சுந்தர மகாகாளியம்மன் கோயில் 127வது ஆண்டு பிரமோத்ஸவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை படுகள காட்சி நடைபெற்றது. 
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில் உள்ள சுந்தர மகாகாளியம்மன் கோயிலில் 127 வது ஆண்டு பிரமோத்ஸவ விழா கடந்த 19ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. வரலாற்று சிறப்பு பெற்ற படுகள காட்சி கும்பகோணம் சுந்தரமகா காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை பச்சக்காளியும், பவளக்காளியும் படுகள காட்சியை கண்டருளினர். 
இந்நிகழ்வில் கோயில் முன்பு குவிந்திருந்த பக்தர்கள் சேலையால் போர்த்தப்பட்டிருந்தனர். இதையடுத்து காளி வேடமிட்டவர்கள், பக்தர்கள் மீது மஞ்சள்நீர் தெளித்து, அவர்களுடைய பாவங்களை போக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பச்சக்காளி, பவளக்காளி ஊஞ்சல் உற்சவமும், பிறந்த வீட்டுக்கு செல்லும் வைபவம், நகர்வலக் காட்சி நடைபெற்றது. 
வருகிற செவ்வாய்க்கிழமை (மே 1) காவிரி ஆற்றிலிருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரையுடன் பச்சக்காளி, பவளக்காளி வீதியுலா நடைபெறுகிறது. புதன்கிழமை (மே 2) பச்சக்காளி, பவளக்காளி கோயிலுக்கு திரும்பும் நிகழ்ச்சியும், மே 3 ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.