தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்

தஞ்சாவூர், கும்பகோணம் கோட்டங்களில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

தஞ்சாவூர், கும்பகோணம் கோட்டங்களில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
கமலேஷ் சந்திரா தலைமையிலான குழு அறிக்கையின் பரிந்துரைகள் அனைத்தையும் முழுமையாக 1.1.2016 முதல் அமல்படுத்தப்பட வேண்டும். அனைத்து பணி நிறைவு பலன்களும் 1.1.2016 முதல் பணி நிறைவு பெற்ற அனைத்து கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் கிடைக்கும் விதமாக அமல்படுத்த வேண்டும். மேலும், நிலுவைத் தொகை கணக்கீட்டில் ஏற்கெனவே இருந்த குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
பணிக்கொடை உச்சவரம்பை ரூ. 1.50 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக மாற்றி அமைக்க வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கான குழுக் காப்பீட்டுச் சந்தாவை மாதம் ரூ. 500 ஆக மாற்றி, குழுக் காப்பீட்டுத் தொகையின் உச்ச வரம்பை ரூ. 5 லட்சமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
இதன்படி, தஞ்சாவூர் கோட்டத்தில் உள்ள 294 தலைமை, கிளை அஞ்சலகங்களில் பணியாற்றும் 494 கிராமிய அஞ்சல் ஊழியர்களில் செவ்வாய்க்கிழமை 387 பேர் பணிக்கு வரவில்லை. இதேபோல, கும்பகோணம் கோட்டத்தில் 350 ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதையொட்டி, கும்பகோணம் தலைமை அஞ்லகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டத் தலைவர்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் ஆர். சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.