உளுந்து பயிரில் கூடுதல் மகசூல் பெற...

உளுந்து பயிரில் கூடுதல் மகசூல் எடுப்பது குறித்து வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
Updated on
1 min read

உளுந்து பயிரில் கூடுதல் மகசூல் எடுப்பது குறித்து வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 
"பேராவூரணி வட்டத்தில் சுமார் 500 ஏக்கர் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உளுந்து பயிர் தற்சமயம் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ளது. இத்தருணத்தில் 2 சத டி.ஏ.பி கரைசல் தெளிப்பது மிகவும் அவசியமாகும்.
ஒரு ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டி.ஏ.பி உரத்தினை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே ஊறவைத்து நன்கு கலக்கி விட வேண்டும். மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொண்டு அத்துடன் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலமாக ஒரு ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும். 35-வது நாள் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 45-வது நாள் காய் பிடிக்கும் தருணத்தில் ஒரு முறையும் மேற்கண்டவாறு கரைசல் தயாரித்து இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com