ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வாகன ஓட்டுநர்கள்-உரிமையாளர்களுடன் காவல்துறையினர் கலந்தாலோசனை

ஒரத்தநாட்டில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் குமார் தலைமையில் புதன்கிழமை அனைத்து வாகன

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:58 am

DIN

ஒரத்தநாட்டில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் குமார் தலைமையில் புதன்கிழமை அனைத்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. 
 இக்கூட்டத்தில் ஒரத்தநாடு,  பாப்பநாடு,  ஊரணிபுரம்,  திருவோணம், வாட்டர்த்திக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் டிஎஸ்பி குமார் பேசியது: ஒரத்தநாடு பகுதிகளில் விபத்துகளை தடுக்கவும் , சாலை விதிகளை கடைப்பிடிக்கவும் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். 
லோடு ஆட்டோக்களில் பொதுமக்களை ஏற்றினால் ஆட்டோவை பறிமுதல் செய்து , வாகனம், ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்படும்.  லோடு ஆட்டோக்களால்தான் அதிகமான இருசக்கர வாகன திருட்டு, ஆயுத கடத்தல் போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. 
 உங்களிடம் தெரியாத நபர் வாகனம் வாடகைக்கு கேட்டால் அவரை உங்களது செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து கொள்வது அவசியம். 
ஒரத்தநாடு போன்ற பெரும் நகரங்களில் வர்த்தக சங்க நிர்வாகிகள் தலையிட்டு இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும்.  
நகர்ப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக வானங்கள் நிறுத்தினால் வாகனத்தின் அருகே உள்ள கடைக்காரர்தான் பொறுப்பேற்க வேண்டும்.  மேலும்,  நகர்ப்பகுதியில் வேகமாக செல்லும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.
கூட்டத்தில், ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன்,  உதவி காவல் ஆய்வாளர் தமிழரசன், தலைமை காவலர் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.