அரிசி, கோதுமைக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சம்மேளனத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் கோதுமைக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுமையான வரிவிலக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 277 வேளாண்மை விற்பனைக் கூடங்களையும் தமிழக அரசு நவீன கட்டமைப்பு வசதிகளுடன் மாற்றி அமைக்க வேண்டும். தமிழகத்தில் நெல், அரிசியைப் பொருத்தவரை பற்றாக்குறை மாநிலமாக இருந்து வந்தது. பிற மாநிலங்களில் குறிப்பாக ஆந்திரம், கர்நாடகம் ,மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து நெல், அரிசியைக் கொண்டு வந்து தமிழக மக்களின் தேவையை நிறைவு செய்து வருகிறோம். இந்நிலையில், வேளாண்மை அதிகாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்து எடுத்து வரும் நெல், அரிசி லாரிகளை மறித்து சந்தைக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
இதேபோல, வேளாண் விளைபொருட்களை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து அரிசி ஆலைகளுக்கு லாரியில் எடுத்து வரும்போதும், அரிசி ஆலைகளில் இருப்பு வைத்துள்ள நெல்லுக்கும் சந்தை கட்டணம் வசூலிக்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில சம்மேளனத் தலைவர் துளசிங்கம் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஏ.சி. மோகன், பொருளாளர் சி.பி. சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் பி.கே.வி.எஸ். வாசன், தமிழ்நாடு அரசு முகவர்கள் சங்கங்களின் சம்மேளன ஆலோசகர் சந்திரசேகரன், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட அரைவை முகவர்கள் சங்கத் தலைவர் எஸ். விஜயகுமார், செயலர் எஸ்.எம். குணசேகரன், பொருளாளர் வி. பச்சையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம்..! நியூசிலாந்து வீரரின் சாதனை!
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க சுங்கக் கட்டணம் இல்லை! ஈரான் உறுதி அளித்ததாக டிரம்ப் பதிவு!

வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?

விஜய் குடும்பப் புகைப்படங்கள்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


