தஞ்சாவூர் தமிழ் அரசி திருமண மண்டபத்தில் புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (மார்ச் 30) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
தமிழுக்காகவும், தமிழ் சமுதாயத்துக்காவும் தொண்டாற்றி வந்த ம. நடராசன் மார்ச் 20-ம் தேதி அதிகாலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் விளார் கிராமத்தில் முள்ளி வாய்க்கால் முற்றம் எதிரே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை வகிக்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தொடக்கவுரையாற்றுகிறார். நடராசன் படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு திறந்து வைக்கிறார்.
நடராசன் குறித்த மலரை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட, அதை மன்னார்குடி செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரித் தாளாளர் வி. திவாகரன் பெற்றுக் கொள்கிறார். இதில், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு அறிமுக வீரர்கள்!

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

