தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கால்பந்து தொடர் போட்டி: அதிரை அணிக்கு சாம்பியன் பட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் புட் பால் கிளப் சார்பில் 8- வது ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் கடந்த ஏப். 27 ஆம் தேதி தொடங்கி

Updated On :14 மே 2018, 10:36 pm

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் புட் பால் கிளப் சார்பில் 8- வது ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் கடந்த ஏப். 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இப்போட்டியில் அதிரை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை, பள்ளத்தூர், காரைக்குடி, நாகூர், கூத்தாநல்லூர், புதுக்கோட்டை, அத்திக்கடை, பொதக்குடி உள்பட மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இந்நிலையில், தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 13) மாலை நடைபெற்றது. இதில் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அதிரை டபிள்யு. எப். சி. அணியும், திருச்சி அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில், இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலையில் இருந்ததால், டை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில், 5-க்கு 4 என்ற கோல் கணக்கில் அதிரை டபிள்யு. எப். சி. அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்த அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையும், ரன்னர் பட்டம் வென்ற திருச்சி அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையும் பரிசளிக்கப்பட்டன.
மேலும், தொடர் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆட்ட நாயகன் அதிரை ஏ.எப்.எப்.ஏ. அணி வீரர் ஆசிப், சிறந்த கோல் கீப்பர் திருச்சி அணி வீரர் விக்கி, சிறந்த பார்வர்ட் ஆட்டக்காரர் அதிரை டபிள்யு. எப். சி. அணி வீரர் முகமது இம்ரான், சிறந்த ஆல் ரவுண்டர் அதிரை டபிள்யு. எப். சி. அணி அணி வீரர் ஹாரிஸ், சிறந்த ஸ்டாப்பர் திருச்சி அணி வீரர் ஹரி ஆகியோருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அப்ரித்கான் வரவேற்றார். அதிரை அகமது ஹாஜா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆட்ட நடுவர்களாக கால்பந்தாட்டப் பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் கார்த்திகேயன், ராஜகோபாலன் ஆகியோர் செயல்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.