தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வீடு புகுந்து 20 பவுன் நகை திருட்டு

பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சியைச் சேர்ந்த பாலசௌந்தரபாண்டியன் (34), வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி ராஜ்கலா (29), 3 குழந்தைகள் உள்ளனர்.

Updated On :14 மே 2018, 10:35 pm

பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சியைச் சேர்ந்த பாலசௌந்தரபாண்டியன் (34), வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி ராஜ்கலா (29), 3 குழந்தைகள் உள்ளனர்.
அண்மையில் துவரங்குறிச்சியில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு வந்திருந்த பாலசௌந்தரபாண்டியன் சில நாள்களுக்கு முன்புதான் மீண்டும் வெளிநாடு சென்றார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது குழந்தைகளை அருகிலுள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து விட்டு, பட்டுக்கோட்டை சென்ற ராஜ்கலா இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் வாசல் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த அலமாரியை உடைத்து அதிலிருந்த 20 பவுன் நகைகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.