கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் மாதம் மாநிலத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கோயில், மடம், வக்ஃபு போர்டு அடிமனை வாடகைதாரர்கள் முடிவெடுத்துள்ளனர்.
கோயில், மடம், அறக்கட்டளை, தேவாலயங்கள், வக்ஃபு போர்டு நிலங்களில் சாகுபடி, அடிமனை வாடகைதாரர்களின் வாழ்வுரிமை மாநாடு கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநாட்டிற்கு மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட செயலாளர் சாமிநடராஜன் வரவேற்றார். மாநாட்டை முன்னாள் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் தொடங்கி வைத்தார். சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழ்நாடு முழுவதும் கோயில், மடம், தேவாலயங்கள், வக்ஃபு போர்டுகளுக்கு சுமார் 8 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில் சுமார் 10 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இதில் பலர் மின்இணைப்பு வாங்க முடியாத நிலையில் உள்ளனர். குத்தகை நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் குத்தகையை உயர்த்துவது, நிலவெளியேற்றம் செய்வது, வருவாய் நீதிமன்றங்கள் வழியே வழக்கு தொடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது.
எனவே, கேரள மாநிலத்தை போல சமய நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்பவர்களுக்கு நிலத்தை சொந்தமாக்கிட வேண்டும்.
ஏழை, எளியோருக்கு இலவசமாக நிலத்தை சொந்தமாக்கிட வேண்டும், இதற்கான தொகையை அரசே வழங்க வேண்டும். எக்காரணத்தினாலும் நிலத்தை விட்டு வெளியேற்றக் கூடாது. குடியிருப்பவர்களுக்கும், அடிமனை வாரிசுதாரர்களுக்கும் நிலத்தின் தொகையை தவணை முறையில் பெற்று கொண்டு சொந்தமாக்கிட வேண்டும். வறட்சி உள்ளிட்ட பல இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் குத்தகை மற்றும் வாடகை நிலுவைத்தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். கோயில் தொடர்பாக கடந்த பிப்ரவரியில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து தமிழக அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவதும் என்றும், ஜூன் மாதம் மாநிலம் முழுவதும் உள்ள அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் மாநில பொது செயலாளர் சண்முகம், பொருளாளர் பெருமாள், முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிறைவில் மாவட்ட தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் லாபம் 41% உயர்வு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

