கும்பகோணம் அருகே குறைந்தழுத்த மின்விநியோகத்தை கண்டித்து ஐந்து கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே காகிதபட்டறை, செருகுடி, தரணி, செல்லப்பன்பேட்டை, காவணூர் ஆகிய 5 கிராமங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குறைந்தழுத்த மின்விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் மோட்டார் சரிவர இயங்காமல் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதேபோல, மேற்கண்ட பகுதிகளில் பம்பு செட் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வரும் 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்கள், மும்முனை மின்சாரம் இல்லாததால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகி வருவதாகவும், இரவு நேரங்களில் மின்சாரமின்றி மின்சாதனப் பொருள்கள் இயங்காமல் முதியவர்கள், குழந்தைகள் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறைந்தழுத்த மின்விநியோகத்தைக் கண்டித்து மேற்கண்ட ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 200 பேர் காகிதப்பட்டறையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த பந்தநல்லூர் போலீஸார், மின்வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், குறைந்தழுத்த மின்விநியோகத்தை சீரமைத்துத் தருவதாக உறுதியளித்ததின் பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் கும்பகோணம் - மணல்மேடு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!

வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க மக்கள் 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்: பிரதமா் மோடி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

