சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

சுவாமிமலையில் பள்ளி மாணவிக்கு நடைபெறவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் பள்ளி மாணவிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

Updated On :21 மே 2018, 2:01 am

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் பள்ளி மாணவிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணமூர்த்தி (24) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும் சுவாமிமலை பகுதியில் உள்ள மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
மாணவியின் தந்தை ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில்,  தாய் மட்டுமே உள்ளார். தற்போது அந்த மாணவி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்த திருமணம் தொடர்பாக கிடைத்த தகவலின்பேரில்,  சுவாமிமலை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருமண மண்டபத்துக்கு சென்று விசாரித்தனர். இதில் தகவல் உறுதியானதையடுத்து,  போலீஸார் திருமணத்தை தடுத்து நிறுத்தி, மாணவியை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். 
சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்ததன்பேரில்,  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் தலைமையிலான அலுவலர்கள் மாணவியிடமும், அவரது தாயிடமும் விசாரித்ததுடன், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். பின்னர்,  18 வயது வரும் வரை இந்த மாணவிக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என தாயிடம் எழுதி வாங்கிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.