தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சார்பில் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 9 மாவட்ட அணிகளுக்கு இடையிலான போட்டிகள் செவ்வாய்க்கிழமை (மே 22) தொடங்குகிறது.
இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மத்திய மண்டல துணை இயக்குநர் இளங்கோ திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் மத்திய மண்டலத்தில் திருச்சி, பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை ஆகிய 9 மாவட்டங்கள் உள்ளன. இவற்றுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
தொடக்கத்தில் துறை சார்ந்த தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெறும். தொடர்ந்து நீச்சல் போட்டி, தடகள போட்டி, கைப்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன. துறை ரீதியான போட்டிகளில் அணிப் பயிற்சி, ஏணிப் பயிற்சி, நீர்விடுகுழாய் பயிற்சி, கயிறு ஏறுதல், தந்திரகதம்ப போட்டி ஆகியவை நடைபெறும். இப்போட்டிகள் மே 24-ம் தேதி நிறைவுபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பரிசுகள் வழங்குவார் என்றார் இளங்கோ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராகுல் காந்தி, ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்ய உள்ளனா்: செல்வப்பெருந்தகை

மாற்றம் பெற வேண்டும் தேர்தல் நடைமுறை

பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே ஆம்னி பேருந்து மீது பைக் மோதல்: பள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

